බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම බදුල්ල දිස්ත්රික් ලේකම් කාර්යාලීය ශ්රවණාගාරයේදී පැවැත්විය.
මෙහිදී මේ වන විට දිස්ත්රික්කය තුළ ක්රියාත්මකවන සංවර්ධන ව්යාපෘතිවල වර්තමාන ප්රගතිය හා ඒවා ක්රියාත්මක කිරීමේදී පැන නැගී ඇති ගැටළු සම්බන්ධව මෙන්ම ඉදිරියේදී ක්රියාත්මක කිරීමට යෝජිත සංවර්ධන වැඩසටහන් පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කරන ලදි.
එමෙන්ම සංචාරක වශයෙන් වඩාත් ආකර්ෂණයක් දිනා ගත් නාරංගල පරිසර පද්ධතිය ආරක්ෂා කරමින් සංචාරක කර්මාන්තය නිසි ක්රමවේදයක් සකස් කිරීම සම්බන්ධයෙන් අවධානය යොමු විය. බදුල්ල දිස්ත්රික්කය තුළ මේ වන විට නිරන්තර ගිනි තැබීම් වාර්තා වන බවත්, සමහර ගිනි දැඩි ව්යසනකාරී බවත් දක්නට ලැබෙන බවත් මෙවැනි ක්රියා සිදුකරන්නන්ට එරෙහිව නීතිය තදින්ම ක්රියාත්මක කළ යුතු බවත් අවධාරණය කරන ලදී.
දිස්ත්රික්කයේ සංවර්ධන කටයුතු මෙන්ම වැදගත් තීන්දු තීරණ ගන්නා ප්රධානතම රැස්වීම දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම බැවින් ඒ සඳහා ආයතන ප්රධානීන් සභාගීත්වය අනිවාර්ය බවත් වෙනත් කාර්යයන්ට වඩා ප්රමුඛත්වය ලබා දියයුත්තේ දිස්ත්රික්කයේ කටයුතු පිළිබඳව බවත් මා විසින් මෙහිදී අවධාරණය කරන ලදි.
මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සම සභාපති, පාර්ලිමේන්තු මන්ත්රී මේජර් සුදර්ශණ දෙණිපිටිය මැතිතුමා, වරාය, නාවික හා ගුවන් සේවා අමාත්ය නීතිඥ නිමල් සිරිපාල ද සිල්වා මැතිතුමා, නාගරික සංවර්ධන හා නිවාස රාජ්ය අමාත්ය තේනුක විදානගමගේ මැතිතුමා, ප්රාථමික කර්මාන්ත රාජ්ය අමාත්ය චාමර සම්පත් දසනායක මැතිතුමා ඇතුළු දේශපාලන අධිකාරිය, බදුල්ල දිස්ත්රික් ලේකම් ප්රභාත් අබේවර්ධන මහතා ඇතුළු පළාතේ සියළු රාජ්යය ආයතන ප්රධානීන් සහභාගි විය.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றம், அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், சுற்றுலாத்துறையில் அதிக ஈர்ப்பைப் பெற்றிருக்கும் நாரங்கல சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாத் துறைக்கான சரியான அமைப்பை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் பதுளை மாவட்டத்தில் தற்போது அடிக்கடி காட்டுப் பிரதேசங்களில் நெருப்பு மூட்டும் சம்பவங்கள் பதிவாகி வருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், சில தீ விபத்துகள் மிகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளைப் போன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் மிக முக்கியமான கூட்டமாக இருப்பதால், நிறுவனங்களின் தலைவர்களின் ஒத்துழைப்பு கட்டாயம் என்பதுடன் ஏனைய பணிகளுக்கு அப்பால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் நான் இங்கு வலியுறுத்தினேன்.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், பதுளை மாவட்டச் செயலாளர், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட மாகாண அரச நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.