ශ්රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශයේ ලියාපදිංචිය ලබා විදේශ රැකියා සදහා පිටත්ව ගිය ශ්රමිකයින්ගේ පවුල්වල සුභ සාධනය තහවුරු කරමින් රටවිරු සුභ සේවා වැඩසටහන කම්කරු සහ විදේශ රැකියා අමාත්ය ගරු මනූෂ නානායක්කාර මහතාගේ ප්රධානත්වයෙන් හාලිඇල පිහිටි ඌව පළාත් විගමනික සම්පත් මධ්යස්ථානයේදී පැවැත්විය.
එහිදී විදේශ ගත ශ්රමිකයින්ගේ දරුවන් 90 දෙනෙකු සඳහා රුපියල් මිලියන 2.33 ක ශිෂ්යාධාර සහ ඌව පළාතේ දරුවන් 212 දෙනෙකු සඳහා රුපියල් දස දහසක් වටිනා පාසල් උපකරණ කට්ටලය බැගින් ප්රදානය කරනු ලැබීය.
මීට අමතරව විදේශ සේවා නියුක්ති කාර්යාංශයේ ලියාපදිංචිය වැඩිම වාරගනණක් ලබාගෙන විදේශ රැකියා සදහා පිටත්ව ගිය ශ්රමිකයින් 179 දෙනෙක් අගය කිරීම සදහා තිළිණපත් ප්රධානය කරනු ලැබීය.
මෙම අවස්ථාවට රාජ්ය අමාත්ය ජගත් පුෂ්පකුමාර, බදුල්ල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී වඩිවෙල් සුරේෂ්, කම්කරු හා විදේශ රැකියා අමාත්යාංශයේ වැඩබලන ලේකම් ලාල් සමරසේකර, ශ්රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශයේ සභාපති ඒ.ඒ.එම්. හිල්මි යන මහත්වරු ඇතුළු කාර්යාංශයේ ඉහල කළමනාකාරීත්වයද එක්ව සිටියහ.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசத்தின் வீரர் “ரடவிரு” நலத்திட்டம் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார தலைமையில் ஹாலி ஏலயில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடைபெற்றது.
இதன்போது வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள தொழிலாளர்களின் பிள்ளைகள் 90 பேருக்கு 2.33 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களும், 212 ஊவா மாகாண பிள்ளைகளுக்காக தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் அதிகளவான பதிவுகளைப் பெற்று வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்ற 179 பணியாளர்களைப் பாராட்டி பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பதில் செயலாளர் லால் சமரசேகர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.