මැණික් හා ස්වර්ණාභරණ පර්යේෂණ හා අභ්යාස ආයතනයේ නව ප්රාදේශීය කාර්යාලයක් බදුල්ල නගරයේ රේස්කෝස් පාර ස්ථානයේදි ප්රාථමික කර්මාන්ත රාජ්ය ඇමති චාමර සම්පත් දසනායක මහතාගේ ප්රධානත්වයෙන් 13දින ආරම්භ විය.
මැණික් බහුලව තිබෙන ඌව පළාතේ පතල්කරුවන්ට හා තරුණ තරුණියන්ට මැණික් කර්මාන්තය පිළිබදව ඉගෙනීමට හා දේශීය විදේශීය රුකියා අවස්ථා ලබාගැනීමට මෙම ආයතනයෙන් අවස්ථාව ලැබෙන අතර මෙහිදි ඩිප්ලෝමා ඇතුලු පාඨමාලාවන් රැසක් පැවැත්වීමට නියමිතය.
එමෙන්ම මෙම ආයතනයෙන් පළාතේ පතල් කරුවන්ට හා මැණික් වෙළෙදුන්ට මිණි කැටයේ නියම මිල දැනගැනීම විකිණීම හා මැණික් වර්ග හදුනා ගැනීම ඇතුලු සේවාවන් රැසක් මෙහිදි සිදුවේ.
බදුල්ල දිස්ත්රික්කයේ පතල් කරුවන්ට මැණික් කැණීමට අවශ්ය බලපත්ර ලබාදීම මෙහිදි සිදුවේ.
මෙම උත්සව අවස්ථාවට ආණ්ඩුකාරවර ලේකම් ආර්.එච්.සී ප්රියන්ති මහත්මිය, මැණික් හා ස්වර්ණභරණ අධිකාරියේ අධ්යක්ෂ ජනරාල් මංගල විජේනායක මහතා ඇතුලු මැණික් සංස්ථාවේ නිළධාරින්, ඌව පළාත් සභාවේ අමාත්යාංශ ලේකම්වරුන්, ආයතන ප්රධානීන්, මැණික් වෙළදුන් ඇතුලු පිරිසක් සහභාගී විය.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புதிய பிராந்திய அலுவலகம் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக தலைமையில் இன்றைய தினம் பதுளை ரேஸ்கோர்ஸ் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இரத்தினக்கற்கள் அதிகம் உள்ள ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இரத்தினக்கல் தொழில் பற்றி அறிந்து கொள்வதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் இந்த நிறுவனத்தின் ஊடாக வாய்ப்பு கிடைப்பதுடன், டிப்ளோமா உள்ளிட்ட பல பாடநெறிகளும் இங்கு நடத்தப்படவுள்ளது.
மேலும், இந்த நிறுவனம் மாகாணத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இரத்தினக்கல் வியாபாரிகளுக்குச் சரியான விலையை அறிந்து, விற்பனை செய்தல் மற்றும் இரத்தின வகைகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல சேவைகளை வழங்கவுள்ளது.
அதேவேளை பதுளை மாவட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு இரத்தினக்கல் அகழ்வதற்குத் தேவையான உரிமங்களும் இங்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மங்கள விஜேநாயக்க, இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், ஊவா மாகாண சபை அமைச்சின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இரத்தினக்கல் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.