ගැටුම්, අභියෝග, බාධක හමුවේ ශ්රී ලංකාව නව මගක ගමන් කරන අවස්ථාවක ලක්දිව උතුරේත්, දකුණේත් සිංහල දමිළ සහෝදරයන් සිය නව අවුරුදු උදාව සමරන මෙම අවස්ථාවේ ඔවුන් සියළු දෙනා හා එක් වනුයේ සතුටු සිතිනි.
ස්වභාව ධර්මයත් මිනිසාත් අතර ඇති නොබිදෙන සම්බන්ධය සමඟ බැඳී ඇති සිංහල හින්දු අළුත් අවුරුද්ද අප සියළු දෙනා වෙත ලබා දෙනුයේ, එකිනෙකා අතර සතුට බෙදා ගැනීමේත්, බැදීම් වල ඇති වටිනාකමේත් පණිවිඩය යි. සියළු බේද අතහැර නෑදෑකම් අළුත් කර ගන්නට, නව අර්ථයක් සියල්ලට ලබා දෙන්නට සිංහල හින්දු අළුත් අවුරුදු උදාව මඟ පාදා දෙයි.
අතීතයේදී ශ්රී ලංකාවටම ආවේණික වූ සංස්කෘතික වටිනාකම් සමඟ සමරන ලද සිංහල හින්දු අළුත් අවුරුද්ද අද වන විට වාණිජකරණය වීම තුළ අළුත් අවුරුද්දේ ගැඹුරු අර්ථය ක්රමයෙන් සමාජය තුළින් ගිලිහී යන බවක් අද වන විට දක්නට ලැබේ. එසේ වියැකී යාමට නොදී අපගේ දරුවන්ට ද සංස්කෘතිකමය වශයෙන් එහි ඇති වැදගත්කමද වටහා දෙමින්, නව අර්ථයකින් සිංහල හින්දු අළුත් අවුරුද්ද සැමරීමට මෙවර පෙළ ගැසෙමු.
අළුත් අවුරුද්දේ අර්ථය වටහා ගනිමින් සොබාදහමේ මෑණියගේ රැකවරණය තුළ ඇයට කෘතවේදී වෙමින් ද සාමූහිකත්වය තුළින් ද, ලක්වාසී අප වෙත ඇති අභියෝග ජය ගැනීමට හැකිවන සාමය, සතුට, සෞභාග්ය සපිරුණු සුභ නව වසරකට ලක්වාසී සියළු දෙනා වෙත මා හෘදයාංගම ආසිරි පතමි !
ඒ.ජේ.එම්. මුසම්මිල්,
ඌව පළාත් ආණ්ඩුකාරවර
சவால்கள்இ தடங்கல்களுக்கு மத்தியில் புதிய பாதையில் பயணிக்கிறதோர் சந்தர்ப்பத்தில் இலங்கை வாழ் சிங்கள மற்றும் தமிழ் சகோதரர்கள் இன்றைய தினம் புது வருடப் பிறப்பை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.
இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணை பிரியாத தொடர்புகளுடன், ஒருவருக்கொருவர் தமக்கிடையிலான ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற நற்செய்தியை இந்த சிங்கள தமிழ்ப் புத்தாண்டு எனக்கு எடுத்துரைக்கின்றது. அனைத்து வேறுபாடுகளையும் ஓரங்கட்டிவிட்டு, புதிய உத்வேகத்துடன் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளச் சிங்கள தமிழ் புது வருடப் பிறப்பு எமக்கு வழி வகுக்கின்றது.
பண்டைய காலத்தில் இலங்கைக்கு உரித்தான கலாச்சார ரீதியிலான நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்ட சிங்கள தமிழ்ப் புத்தாண்டு, இன்று வர்த்தக மயமாக்கல் மூலம் புது வருடப் பிறப்பின் ஆழமான அர்த்தம் சமூகத்தை விட்டு நழுவிச் செல்வதாகவே தென்படுகிறது. எனவே அவ்வாறு நழுவிச் செல்ல விடாது எமது பிள்ளைகளுக்கும் நாட்டின் கலாச்சார ரீதியிலான முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தி இன்முகத்துடனும், புதிய இலக்குகளுடன் சிங்கள தமிழ் புது வருடத்தைக் கொண்டாடுவதற்கு இம்முறை தயாராகுவோம்.
புது வருடப் பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, இயற்கை அன்னையின் அரவணைப்பில், அவளை மதித்து ஒற்றுமையுடன்இ இலங்கை வாழ் ஒரே மக்களான எம் மத்தியில் காணப்படும் சவால்களை வென்றெடுக்கக்கூடிய, சாந்தி சமாதானம் சௌபாக்கியம் நிறைந்த புது வருட வாழ்த்துக்களை இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இதய பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏ.ஜே.எம். முஸம்மில்
ஊவா மாகாண ஆளுநர்