ඩෙංගු මර්ධන වැඩසටහන්වල ප්රගතිය පිළිබඳව සාකච්ඡාවක් අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මහතාගේ ප්රධානත්වයෙන් කොළඹ අරලියගහ මන්දිරයේ සිට සූම් තාක්ෂණය ඔස්සේ පවත්වන ලදී.
මෙහිදී සියලු බලධාරීන් මැදිහත් කර ගනිමින් ඩෙංගු රෝගය පැතිරීම වැළැක්වීමට අවශ්ය කඩිනම් පියවර ගන්නැයි අග්රාමාත්යවරයා ආණ්ඩුකාරවරුන්ට පැවසීය. තවද සිය බල ප්රදේශවල ඩෙංගු ව්යාප්තිය පිළිබඳ තොරතුරු රැස්කරමින් රෝගය පාලනය කිරීමට අදාල ක්රියාමාර්ග ගැනීමේ වැදගත්කම අවධාරණය කළ අග්රාමාත්යවරයා සදහන් කළේ තවදුරටත් රෝගය පැතිරී යාම වැළැක්වීමට ප්රමුඛතාවය දිය යුතු හෙයින් මේ වන විට ප්රාදේශීය සෞඛ්ය වෛද්ය නිලධාරී කාර්යාල හරහා රෝග පාලනයට ක්රියාත්මක වැඩසටහන් නොනවත්වා පවත්වා ගෙන යාම අවශ්ය බවයි.
ඩෙංගු රෝගය පාලනයට ඌව පළාත තුල මෙතෙක් ගෙන ඇති ක්රියාමාර්ග සහ එහි ප්රගතිය සම්බන්ධයෙන් අගමැතිවරයා දැනුවත් කළ අතර, ඉදිකිරීම් භූමි, පාසල් හා ආගමික ස්ථාන ආශ්රීතව ඩෙංගු මදුරුවන් බෝවීමේ වැඩි ප්රවණතාවයක් පවතින හෙයින් එවැනි ස්ථාන කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කෙරෙන බවත් ඒ සඳහා සෞඛ්ය හා ආරක්ෂක අංශවලින් සුවිශේෂී දායකත්වයක් හිමිවන බවත් සඳහන් කරන ලදි.
මෙම අවස්ථාවට පළාත් ආණ්ඩුකාරවරුන්, පළාත් සභ පළාත් පාලන රාජ්ය අමාත්ය ජානක වක්කුඹුර, ස්වදේශ කටයුතු රාජ්ය අමාත්ය අශෝක ප්රියන්ත, අග්රාමාත්ය ලේකම් අනුර දිසානායක, රාජ්ය පරිපාලන අමාත්යංශ ලේකම් රංජිත් අශෝක මහතා, පළාත් සභා ලේකම්වරුන්, පළාත් පාලන කොමසාරිස්වරුන්, පළාත් සෞඛ්ය සේවා අධ්යක්ෂවරුන් ඇතුළු පිරිසක් සහභාගි වූහ.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்
கொழும்பு அலறி மாளிகையிலிருந்து zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.
இதன்போது அனைத்து பொறுப்பதிகாரிகளும் முன்வந்து டெங்கு பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர்களிடம் பிரதமர் கூறினார். மேலும் தத்தமது அதிகார எல்லைகளில் டெங்கு பரவுவது குறித்த தகவல்களைச் சேகரித்து நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர், டெங்கு மேலும் பரவாமல் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தொடர்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஊவா மாகாணத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து பிரதமரை தெளிவூட்டிய அதேவேளை, நிர்மாணப் பணியிடங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்களை அண்மித்த பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் உற்பத்தியாகி வருவதனால் அவ்வாறான இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், இதற்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்கள் விசேட பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாகாண ஆளுநர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, மாகாண சபை செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.