ඌව පළාත් සභාවේ ප්රධාන අමාත්යාංශයට අයත් මුදල් හා ක්රමසම්පාදන, නීතිය හා සාමය, අධ්යාපන, පළාත් පාලන, ඉඩම්, විදුලිබල හා බල ශක්ති, ඉදිකිරීම්, ග්රාමීය යටිතල පහසුකම් අමාත්යාංශයේ නව ලේකම්වරයා ලෙස එච්.එම්. නන්දසේන මහතා අද (01) දින පත්කරන ලදී.
ප්රධාන අමාත්යාංශයේ ලේකම්වරිය ලෙස කටයුතු කළ සන්ද්යා අඹන්වල මහත්මිය විශ්රාම යෑම නිසා පුරප්පාඩු වූ තනතුරට ඌව පළාත් සභාවේ නියෝජ්ය ප්රධාන ලේකම් (පිරිස් පුහුණු) ලෙස කටයුතු කළ නන්දසේන මහතා නව ලේකම්වරයා ලෙස පත් කෙරුණි.
ඌව පරණගම යාලගමුව ගමේ උපත ලබා ගමේ පාසලෙන් ප්රාථමික අධ්යාපනය කටයුතු ආරම්භ කළ එතුමා, මස්පන්න මහා විද්යාලය සහ මහනුවර ධර්මරාජ විද්යාලවල ආදි ශිෂ්යයෙක් වේ. ශ්රී ජයවර්ධනපුර විශ්ව විද්යාලයේ කලමනාකරණ (රාජ්ය) පාඨමාලාව හදාරා පසුව, කැලණිය විශ්ව විද්යාලයෙන් පශ්චාත් උපාධිය ද ඔහු ලබා ගෙන තිබේ.
ඉන් පසුව ග්රාම සේවා නිලධාරියකු, සමෘද්ධි කලමනාකරුවකු, පළාත් ආදායම් දෙපාර්තමේනතුවේ බදු නිළධාරියකු වශයෙන් රාජ්ය සේවයේ කටයුතු කර තිබේ. පසුව රාජ්ය පරිපාලන සේවා තරග විභාගයෙන් උසස් ලෙස සමත් වූ නන්දසේන මහතා ත්රිකුණාමලයේ ඉඩම් සහකාර කොමසාරිස්, කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුවේ සහකාර අධ්යක්ෂක, බදුල්ල දිස්ත්රික්කයේ සොරණාතොට, වැලිමඩ, හපුතලේ, මීගහකිවුල ප්රාදේශීය ලේකම් කාර්යාල වල සහකාර ප්රාදේශීය ලේකම්වරයා ලෙසත් ඉන් පසුව එම කාර්යාල වල ප්රාදේශීය ලේකම් ලෙස ද රාජකාරි කටයුතු සිදු කර තිබේ.
බදුල්ල මහ නගර සභාවේ නාගරික කොමසාරිස්, ඌව පළාත් සභාවේ පරිවාස හා ළමාරක්ෂක කොමසාරිස් ලෙස කටයුතු කරමින් සිට පාදුක්ක ප්රාදේශීය ලේකම් ලෙසත් ඉන් පසුව දුම්රිය දෙපාර්තමේන්තුවේ අතිරේක සාමාන්යාධිකාරීවරයා ලෙස ද කටයුතු කර තිබේ.
ඉන් පසුව ඌව පළාත් සභාවේ නියෝජ්ය ප්රධාන ලේකම් (පිරිස් පුහුණු) තනතුරේ රාජකාරි කටයුතු කරමින් සිටියදී අද (නොවැම්බර් 01) දින සිට ඌව පළාත් සභාවේ ප්රධාන අමාත්යාංශයේ ලේකම් තනතුරේ වැඩ භාරගෙන ඇත.
මෙම අවස්ථාවට බදුල්ල නගරාධිපති ප්රියන්ත අමරසිරි මැතිතුමා, බණ්ඩාරවෙල ප්රාදේශීය සභාවේ සභාපති පූජ්ය කරගහවෙල නන්දවිමල හිමි ඇතුළු සියලුම ප්රාදේශීය සභාවල සභාපතිවරුන්, ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් ක්රීඩා අමාත්යාංශය ලේකම් නිහාල් ගුණරත්න මහතා ඇතුළු රාජ්ය නිලධාරීන් එක්ව සිටියහ.
ஊவா மாகாண சபையின் பிரதான அமைச்சுகளில் ஒன்றான நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, காணி, மின்சக்தி, கட்டுமானம், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக எச்.எம். நந்தசேன இன்றைய (01) தினம் நியமிக்கப்பட்டார்.
குறித்த பிரதான அமைச்சின் செயலாளராக பணியாற்றிய திருமதி. சந்தியா அபன்வெல ஓய்வு பெற்றதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஊவா மாகாண பிரதி பிரதான செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) ஆகக் கடமையாற்றிய எச்.எம். நந்தசேன அவர்கள் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா பரணகம யாலகமுவ கிராமத்தில் பிறந்து, அங்கேயே தனது பள்ளிப் படிப்பை ஆரம்பித்த அவர், மஸ்பன்ன மாகாண வித்தியாலயம் மாற்று கண்டி தர்மராஜ வித்தியாலயங்களின் பழைய மாணவராவார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேலாண்மை (அரசு) படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் அவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகஸ்தராகவும், சமூர்த்தி முகாமையாளராகவும், மாகாண வருமான திணைக்களத்தில் வரி உத்தியோகஸ்தராகவும் அரச சேவையில் கடமையாற்றியுள்ளார். பின்னர் அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த திரு. நந்தசேன, திருகோணமலையில் காணி உதவி ஆணையாளராகவும், விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளராகவும், சொரணதொட்டை, வெலிமடை, ஹப்புத்தளை, பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராகவும் அதன் பின்னர் அந்த அலுவலகங்களின் பிரதேச செயலாளர் கடமையாற்றியுள்ளார்.
பதுளை மாநகர சபையின் மாநகர ஆணையாளராகவும், ஊவா மாகாண சபையின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளராகவும் அதன் பின்னர் பாதுக்க பிரதேச செயலாளராகவும், புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
அதனையடுத்து ஊவா மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கடமையாற்றிய நிலையில் இன்று (நவம்பர் 01) முதல் ஊவா மாகாண சபையின் பிரதம அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் பதுளை நகர மேயர் பிரியந்த அமராசிரி, பண்டாரவெல பிரதேச சபை தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர் உள்ளிட்ட பிரதேச சபைத் தலைவர்கள், ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.