
උපවාස සමය සහ රාමසාන් උත්සවය වටිනා ආගමිකල අධ්යාත්මික හා සමාජයීය හර පද්ධතියකින් සමන්විතයග එම වටිනාකම් සුරැකෙන සේ ඉතාමත් භක්තියෙන්ල අවංකව උපවාස සමයේ වත් පිළිවෙත් ඉටු කිරීමට ඉස්ලාම් බැතිමත්හු කැපවෙති.
සාමයෙන් සහ සහෝදරත්වයෙන් සපිරි දියුණු ශ්රී ලංකාවක් ගොඩනැඟීමට ජනාධිපතිතුමා ප්රමුඛ අපේ රජය ගෙන යන වැඩකටයුතුවලටල මෙම සමාජ ධර්මතා මනා පරමාදර්ශයක් වන අතර එමගින් ලබාදෙන ප‚විඩය සමාජයීය යහපැවැත්ම උදෙසා යෙදවීමට අප සියලූ දෙනා අදිටන් කරගත යුතුය.
ආගමික මඟපෙන්වීම අනුව ඊදුල් ෆිත්ර් හෙවත් රාමළාන් උත්සවය සතුටින් හා ප්රීතියෙන් සමරමුල එමෙන්ම අප අවට සිටින ඥාතීන් සහ අසල්වාසීන් සමගද සතුට ඛෙදා ගනිමු.
“සර්ව බලධාරී අල්ලාහ් අප ඉටුකළා වූ උපවාසශීලයන් සහ අපගේ යහ ක්රියාවන් පිළිගෙන අපට උසස් ආනිසංස පිරිනමනු මැනවල මෙම උතුම් රාමළාන් මාසයේ අප ලබා ඇති සැදැහැවත් භාවය සහ අල්-කුර්ආනය සමඟ අපගේ සමීප සබඳතාව හේතුකොට ගෙන අපහට යහපත් සමාජයක් උදාකරනු මැනව.”
ඔබ සියලු දෙනාටම ඊදුල්-ෆිත්ර් අවුරුදු දින සුභ පැතුම් එක්කරමි. ඊද් මුබාරක් !…
ඒ.ජේ.එම්. මුසම්මිල්ල
ඌව පළාත් ආණ්ඩුකාරවර

ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன. அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக வாழ முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணிக்கின்றனர்.
சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னெடுக்கும் பணிகளின்போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காகப் பயன்படுத்த நாம் அனைவரும் உறுதிபூணவேண்டும்.
மார்க்கம் வழிகாட்டியுள்ள பிரகாரம் பெருநாளைச் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் அதேவேளை, எம்மைச் சுற்றியுள்ள எமது உறவினர்கள் மற்றும் அயலவர்களும் இத்தினத்தை மனநிறைவுடன் கழிப்பதற்கு வழிசெய்வோம்.
‘எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நாம் நோற்ற நோன்புகளையும், எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வதோடு, ரமழானில் நாம் அடைந்த பக்குவத்தையும், அல்குர்ஆனுடனான நெருக்கமான உறவையும் கொண்டு அல்லாஹுதஆலா பொருந்திக்கொண்ட சமூகமாக வாழ நல்லருள் புரிவானாக!’
உங்கள் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் ஷஈத் முபாரக்|
ஏ.ஜே.எம். முஸம்மில்
ஊவா மாகாண ஆளுநர்